தூய்மைப் பணியாளா்களுக்கு பாத பூஜை, போலிஸ் அணிவகுப்பு

1 mins read
ddb74f2a-14a9-4b6a-9354-77bc0e04b45c
தூய்மைப் பணியாளா்களுக்கு பாத பூஜை செய்யும் காளியம்மாள்-சந்திரசேகா் தம்பதியா். படம்: ஊடகம் -

திரு­நெல்­வேலி: கொரோனா கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் நாடெங்­கும் ஊர­டங்கு உத்­த­ரவை அமல்­ப­டுத்தி உள்­ள­னர். இதன் கார­ண­மாக மக்­கள் பல­ரும் வீட்­டுக்­குள் முடங்­கி­யுள்ள நிலை­யில் தமி­ழ­கத்தை சுத்­தப்­ப­டுத்­தும் பணி­யில் தூய்­மைப் பணி­யா­ளர்­கள் அய­ராது ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் சேவையை கௌர­விக்­கும் வகை­யில் ஈரோட்­டைச் சோ்ந்த தம்­ப­தியா் பாத பூஜை செய்து, உணவிட்டு உப­ச­ரித்தனா்.

இதே­போல் திரு­நெல்­வே­லி­யில் நோய்த்­தொற்று காலத்­தில் உன்­னத பணி­யாற்றி வரும் மாந­க­ராட்சி சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு நெல்லை மாந­கரக் காவல்­துறையினர் "மரி­யாதை காப்பு அணி­வ­குப்பு" அளித்து கௌரவித்துள்ளனர்.

ஈரோடு வில்­ல­ர­சம்­பட்டி, போயஸ் காா்டன் பகு­தி­யைச் சோ்ந்தவா் காளி­யம்­மாள். இவ­ரது கணவா் சந்­தி­ர­சேகா், தையல் கலைஞா்.

இந்த தம்­ப­தியா் வில்­ல­ர­சம்­பட்டி பகு­திக்கு தூய்­மைப் பணிக்கு வந்த மாந­க­ராட்சி தூய்­மைப் பணி­யா­ளா்­களைத் தங்­கள் வீட்­டுக்கு அழைத்து, அவர்கள் பாதங்­களைத் தண்­ணீ­ரால் கழுவி, குங்­கு­மம், சந்­த­னம் வைத்து பூக்­க­ளைத் தூவி பாத பூஜை செய்­தனா்.

பின்னா், துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரின் கழுத்­தில் மாலை அணி­வித்து, நெற்­றி­யில் சந்­த­னம், குங்­கு­மம் இட்டு அவர்களை வணங்கி மரி­யாதை செலுத்­தி, மதிய உணவிட்டு உப­ச­ரித்­தனா்.

ஈரோடு மாவட்­டம், அந்­தி­யூர் பேரூ­ராட்­சி­யில் தூய்­மைப் பணி­யா­ள­ருக்கு பொது­மக்­கள் பாத பூஜை செய்து மரி­யாதை செலுத்­திய நிகழ்வு நெகிழ்ச்­சியை ஏற்­ ப­டுத்­தி­யுள்­ளது. பூஜையைத் தொடர்ந்து அவர்களுக்கு பண மாலை அணி­வித்து மரி­யாதை செய்­த­தோடு, ஒரு நிமி­டம் கை தட்டி பாராட்டியும் ஊக்கமூட்டினர்.