சிங்கப்பூரின் நிதியிருப்பிலிருந்து $21 பில்லியனை எடுக்க அதிபர் ஒப்புதல்

மார்ச், ஏப்­ரல் மாதங்­களில் அறி­விக்­கப்­பட்ட மீட்­சிக்­கான மற்­றும் ஒற்­று­மைக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் தொடர்­பான திருத்­தப்­பட்ட துணை வழங்­கீட்டு மசோ­தா­வுக்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் ஒப்­பு­தல் அளித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் நிதி­யி­ருப்­பி­லி­ருந்து $21 பில்­லி­யனை எடுக்­க­வும் அவர் ஒப்­பு­தல் அளித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஊழி­யர்­கள், வர்த்­த­கங்­கள், குடும்­பங்­க­ளுக்கு மேற்­கூ­றப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் கைகொ­டுக்­கின்­றன.

கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், அர­சாங்க ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் விரை­வில் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை திரு­வாட்டி ஹலிமா வலி­யு­றுத்­தி­னார்.

“சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பைத் தணிப்­பது முக்­கி­யம். இந்­தச் சவால்­மிக்க கால­கட்­டத்தை அனை­வ­ரும் கடக்க நாம் உத­வு­வது அவ­சி­யம்,” என்று நேற்று அவர் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டார்.

“நிலைமை மாறிக்­கொண்டே இருக்­கிறது. எனவே, புதிய நட­வ­டிக்­கை­க­ளைச் சிறப்­பாக நடை­முறைப்­ப­டுத்­து­வது முக்­கி­யம். அதே­வே­ளை­யில், மாறி­வ­ரும் சூழ­லுக்கு ஏற்ப பதில் நட­வ­டிக்­கை­க­ளை­யும் நாம் மேற்­கொள்ள வேண்­டும்,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!