சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இவ்வாறு ஊரடங்கை நீட்டிக்கும்போதுதான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் என அனைவரையும் முழுமையாக பரிசோதிக்கமுடியும் எனவும் குழு கூறியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு, சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு, வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிகிச்சை முறைகளையும் ஆராய்ந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை
1 mins read
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது சென்னை மாநகராட்சி வாகனத்தில் கிருமி நாசினியைத் தெளிக்கின்றனர் மாநகராட்சி ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

