சென்னை: சென்னையில் கொரோனா கிருமியால் அதிகள வில் பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதி என்று எதுவும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். நடமாடும் மளிகை, காய்கறிக் கடைகளைக் கே.கே.நகரில் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், செய்தியாளர்களிடம் பேசியபோது, "ரேஷன் கடையில் மக்களின் தேவைக்கேற்ப அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும். எனவே தேவையின்றி கூட்டம் கூடவேண்டாம்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆணையர்: சென்னையில் பதற்றம் உள்ள பகுதி என எதுவுமில்லை
1 mins read

