சென்னை: விமானச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மலேசியாவில் 350 இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் என்பவர் சார்பில், அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

