திருச்சி: உயிர்க்கொல்லி நோயாக உலகெங்கும் உள்ள மக்களைத் தொற்றி வரும் கொரோனா கிருமியின் ஆபத்து புரியாமல் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுபவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக போலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலிஸ் உயர் அதிகாரிகள் கூறியபோது, "தமிழகத்தில் அனைத்துப் பொருட்களும் எப்போதும் போலவே தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை.
"இந்த சூழ்நிலையில், சிலர் தேவையின்றி தங்கள் வசிப்பிடத்தில் இருந்து 2 கி.மீ. துாரத்திற்கு அப்பால் சென்று வெளியே சுற்றி வருகின்றனர். தங்களுக்கு மட்டு மின்றி தங்களது குடும்பத்தினரின் உயிருக்கும் அவர்களது போக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ப தால் விதிமுறைகளை மீறுபவர் களைக் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளோம்," என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அத்தியாவசியம் என்றாலும் வீட்டில் இருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது என போலிஸ் ஆணை யர் வரதராஜு எச்சரித்துள்ளார்.
"திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதியிலும் மளிகை கடைகள் உள்ளன. எனவே பொது மக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்கு மேல் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று வரதராஜு கூறினார்.
இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிருமி பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இருப்பினும் கிருமி குறித்த கொடூரம் இன்னும் மக்களுக்கு தெளிவாகப் புரியாததால் அலட்சிய மாக ஊர் சுற்றி வருகின்றனர்.
இந்த அலட்சியப் போக்கை கட்டுப்படுத்தவே போலிசார் சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடுமையாக்கி உள்ளனர்.
அறிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ எவரேனும் கிருமிகளைப் பரவவைப்பது என்பது சட்டப்படி குற்றம். அதற்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதற்கு இந்திய தண்டனை சட்டம் 269 பிரிவு வழிவகை செய்கிறது.
தற்போது ஊரடங்கை மீறுவோர் இந்த சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைதானவர்களிடம் இருந்து 97 ஆயிரத்து 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 38.54 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயர் நீதிமன்றம்: கட்டுப்படாதவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம்
ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்துவோரின் வாகனங்களைப் போலிசார் எந்தவித பாவ புண்ணியமும் பார்க்காமல் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக தினமும் காலை 6 முதல் மதியம் 1 வரை பொதுமக்கள் வெளியே சென்றுவர அனுமதி உள்ளது.
இந்நிலையில், மதியம் 1 மணிக்கு பிறகும் தேவையின்றி பலர் வாக னங்களில் பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், "144 தடை உத்தரவை மீறி வெளியே அனாவசியமாக சுற்றித் திரிபவர் களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் போலிசார் உடனடி யாகப் பறிமுதல் செய்யவேண்டும்.இதுகுறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் போலிசார் தகவல் தெரிவிக்கவேண்டும்," என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-

