ஆயிரம் கோடி ரூபாய்: தமிழக முதல்வர் கோரிக்கை

ஆயிரம் கோடி ரூபாய்: தமிழக முதல்வர் கோரிக்கை

2 mins read
0d1fbf9c-6a26-4b3a-bc73-4e35f43633cd
நீண்டகால ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்மைக்கு முழு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்றார். படம்: இணையம் -

சென்னை: தமிழகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு பணிக்குழுவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 12 குழுக்களும் கொரோனா கிருமி பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கொரோனா கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி வசதி மூலம் கலந்தாலோசித்தார்.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கொரோனா கிருமி பரவல் தடுப்பு உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

"தற்போது ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்படக்கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பதைப் பிரதமருக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.

"பருப்பு, மசாலா வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் எளிதாகக் கொண்டுவர வழிவகை செய்யவேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் இதுபோன்ற சரக்குப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.

இந்த நீண்டகால ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், வேளாண்மைக்கு முழு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்றார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக பிரதமர் சிறப்புத் தொகுப்பு ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு நீடித்தால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்களை ஆதரிக்கும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கைகள் போர்க்­கால அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், உள்­ளாட்சி அமைப்­பு­கள் மூலம் அனைத்­துப் பொது இடங்­களும் தூய்­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

இது­வரை 32,371 தனிப் படுக்­கை­களும், 5,934 அவ­சர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­களும் அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் தயா­ராக வைக்­கப்­பட்­டுள்­ள­தாக முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

"தொற்று தொடர்­பான பரி­சோ­த­னை­கள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டும். இதற்­காக துரித பரி­சோ­தனை உப­க­ர­ணங்­கள் தேவைப்­ப­டு­கின்­றன. தமி­ழ­கத்­துக்கு 2 லட்­சம் உப­க­ர­ணங்­களை அளிக்க வேண்­டும்.

"21 அரசு மருத்­து­வ­ம­னை­களும், 155 தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் கொரோனா சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வ­ம­னை­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

"தற்­போது தமி­ழ­கத்­தில் 12 அரசு சோத­னைக் கூடங்­களும், 7 தனி­யார் சோத­னைக் கூடங்­களும் உள்­ளன. மாவட்­டத்­துக்கு ஒன்று என்ற அள­வில் இதன் எண்­ணிக்­கையை உயர்த்த வேண்­டும்," என முதல்­வர் பழ­னி­சாமி வலி­யு­றுத்­தி­னார்.

அதிக அளவில் பிசிஆர் மற்றும் துரித பரிசோதனை உபகரணங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், போதுமான அளவில் வெண்டிலேட்டர்கள் தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.