ஊரடங்கால் அதிகரித்த வழிப்பறிக் கொள்ளை

ஊரடங்கால் அதிகரித்த வழிப்பறிக் கொள்ளை

1 mins read
ec0efc9d-b54c-4e8f-bd76-faa094db7841
ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக மக்­கள் வீட்­டிற்­குள் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில் சென்­னை­யில் வழிப்­ப­றிக் கொள்­ளை­யர்­க­ளின் அட்­ட­கா­சம் அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. படம்: ஊடகம் -

சென்னை: ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக மக்­கள் வீட்­டிற்­குள் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில் சென்­னை­யில் வழிப்­ப­றிக் கொள்­ளை­யர்­க­ளின் அட்­ட­கா­சம் அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தமி­ழக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

சென்­னை­யில் மக்­கள் நட­மாட்­டம் குறை­வாக உள்ள பகு­தி­களை நோட்­ட­மிட்டு வழிப்­பறிக் கொள்­ளை­யர்­கள் தங்­க­ளது கைவ­ரி­சை­க­ளைக் காட்டி வரு­கின்­ற­னர்.

கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­களில் அடுத்­த­டுத்து வழிப்­ப­றிச் சம்­ப­வங்­கள் அரங்­கேறி உள்­ளன. அதே­போல் சிலர் மளி­கைக் கடை­க­ளைக் குறி­வைத்து அங்­குள்ள பொருட்­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் செல்­கின்­ற­னர்.

சென்னை மாந­கர் முழு­வ­தும் போலி­சார் தீவிர வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்டு வந்­தா­லும் வழிப்­ப­றிக் கொள்­ளை­யர்­க­ளைத் தடுக்க முடி­ய­வில்லை. கொள்­ளை­யர்­களில் பெரும்­பா­லா­னோர் இரு­சக்­கர வாக­னத்­தில் சுற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.

சென்னை வட­ப­ழனி­யில் மத்­திய அரசு ஊழி­ய­ரி­டம் இரு சக்­கர வாக­னத்­தில் வந்த இரு­வர் கைபேசியைப் பறித்­துச் சென்­றுள்­ள­னர். நுங்­கம்­பாக்­கம் பகு­தி­யில் தனியே நடந்து சென்ற பெண்­ணி­ட­மி­ருந்து 5 பவுன் சங்­கிலி பறிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போல் சங்­கி­லிப் பறிப்பு, கைபே­சிப் பறிப்பு, பணப்பை பறிப்பு என தொடர் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­வதை அடுத்­து பொது­மக்­கள் மிகுந்த கவ­னத்­து­டன் இருக்­க­வேண்­டும் என போலி­சார் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஆங்­காங்கே உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வா­கி­யுள்ள காட்­சி­க­ளைக் கொண்டு வழிப்­ப­றிக் கொள்­ளை­யர்­க­ளுக்கு போலி­சார் வலை­வீசி வரு­கின்­ற­னர்.