காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்து, எச்சரிக்கை

காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்து, எச்சரிக்கை

2 mins read
4db9c58d-3de1-4dd7-82f3-3bcdc8f0ccb0
ஊர­டங்கு உத்­த­ர­வால் வீட்­டி­லேயே அதிக நேரத்­தைச் செல­வி­டும் மக்­கள் பல­ருக்­கும்  உடல் உழைப்பு இல்­லா­த­தால் உடல் எடை அதி­க­ரிக்­கும் ஆபத்து உள்­ள­தாக எச்­ச­ரித்­துள்ள இதய நோய், ஊட்­டச்­சத்து நிபு­ணர்­கள், உண­வில் அதி­க­ளவு காய்­க­றி­கள்,  பழங்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ளும்­படி அறி­வுரை கூறியுள்­ள­னர்.   படம்: ஏஎப்பி/அருண் சங்கர் -

சென்னை: ஊர­டங்கு உத்­த­ர­வால் வீட்­டி­லேயே அதிக நேரத்­தைச் செல­வி­டும் மக்­கள் பல­ருக்­கும் உடல் உழைப்பு இல்­லா­த­தால் உடல் எடை அதி­க­ரிக்­கும் ஆபத்து உள்­ள­தாக எச்­ச­ரித்­துள்ள இதய நோய், ஊட்­டச்­சத்து நிபு­ணர்­கள், உண­வில் அதி­க­ளவு காய்­க­றி­கள், பழங்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ளும்­படி அறி­வுரை கூறியுள்­ள­னர்.

கொரோனா கிருமி மேலும் பர­வா­மல் கட்­டுப்­படுத்த நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு போடப்­பட்டுள்­ள­தால் பெரும்­பா­லான அலு­வ­ல­கப் பணி­யா ­ளர்­களும் வீட்­டிலிருந்தே பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

குழந்­தை­கள் பூங்­காக்­கள் போன்ற வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யா­மல் வீட்­டுக்­குள்­ளேயே தொலைக்­காட்சி பார்ப்­பது, அறைக்­குள்­ளேயே விளை­யா­டு­வது என பொழு­தைக் கழிக்கின்­ற­னர்.

இப்­படி வெளியே செல்­லா­மல் வீட்­டி­லேயே இருந்து வரு­வ­தால் உடல் பரு­மன் அதி­க­ரிக்­கும் அபா­யம் இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இது­கு­றித்து இத­ய­வி­யல் மருத்­து­வர்­கள் கூறுகையில், "உடல் உழைப்பு குறை­யும்­போது பரு­மன் நிச்­ச­யம் அதி­க­ரிக்­கும். உடல் பரு­மன் எப்­போ­துமே நல்­ல­தல்ல. ஆரோக்­கி­ய­மான உடல்­தான் நம்மை நீண்ட காலம் வாழ­வைக்­கும்.

"தற்­போ­தைய ஊர­டங்­கால் வழக்­க­மான நடை­பயிற்சி, உடற்­ப­யிற்­சி­யும் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது. 20 நாட்­கள் முதல் 30 நாட்­கள் வரை உடல் உழைப்பு இல்­லா­த­போது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. இது இத­யம் தொடர்­பான நோய்­கள் மற்ற பிரச்­சினைகளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நல்­ல­தல்ல.

"எனவே தின­மும் வீட்­டி­லேயே தியா­னம், யோகா வில் ஈடு­ப­டுங்­கள். முடிந்­த­வரை வீட்டு வளா­கத்­தி­லேயே நடைப்­ப­யிற்சி, உடற்­ப­யிற்சி செய்­யுங்­கள். பிள்ளைகளு­டன் விளை­யாடி சுறுசுறுப்­பாக இருங்­கள். அடிக்­கடி தூங்­கா­தீர்­கள். இதை­யெல்­லாம் முறை­யாக கடைப்பிடித்­தாலே உடல் பரு­மன் பிரச்­சி­னை­யில் இருந்து தப்­பிக்­க­லாம்," என்று கூறி­யுள்­ள­னர்.

ஊட்­டச்­சத்து நிபு­ணர்­கள் கூறு­கை­யில், "உடல் உழைப்பு அதி­கம் தேவைப்­ப­டாத இந்த ஊர­டங்கு காலத்­தில் முடிந்­த­வரை கடின உண­வு­க­ளைக் குறைத்­துக் கொள்­ளுங்­கள். காய்­க­றி­கள், பழங்­கள், கீரை­களை அதி­க­ளவில் உண­வுடன் சேர்த்துக்கொள்­ள­வேண்­டும்.

"குளிர்­பா­னங்­க­ளுக்கு பதி­லாக எலு­மிச்சை சாறு, மோர், லஸ்சி, இள­நீர் போன்ற பானங்­களை அருந்து வது உட­லுக்கு நல்­லது. உடல் பரு­மன் பிரச்­சி­னை­யில் சிக்­கிவி­டா­மல் ஆரோக்­கிய வாழ்க்கை வாழ கற்­றுக்­கொள்­ளுங்­கள்," என்று அறிவுறுத்தியுள்ளனர்.