ஊரடங்கு உத்தரவை மீறிய 1.75 லட்சம் பேர் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1.75 லட்சம் பேர் மீது வழக்கு

4 mins read
69de029e-c502-4139-83e3-08a5b09dd341
கிருமித் தொற்று பரவல் குறித்து மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விளக்கக் கையேடுகளைக் கொடுத்து வருகின்றனர். படம்: ஏஎப்பி/ அருண் சங்கர் -
multi-img1 of 2

சென்னை: ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து 68 லட்சத்து 57 ஆயிரத்து 344 ரூபாய் அபராத தொகை வசூலாகி உள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும், 1.75 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 1 லட்சத்து 39 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

வீட்டுக் கண்காணிப்பில் 39 ஆயிரம் பேர்

சென்னை: தமி­ழ­கத்­தில் 39 ஆயி­ரம் பேர் வீட்­டுக் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,075 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சுகா­தா­ரத்­துறை செய­லர் பீலா ராஜேஷ், மாநி­லம் முழு­வ­தும் 58,189 பேர் 28 நாட்­க­ளுக்­கான வீட்­டுக் கண்­கா­ணிப்பை முடித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார். மேலும், விமான நிலை­யங்­கள் அருகே உள்ள முகாம்­களில் 62 பேர் அர­சுக் கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கத்­தில் இது­வரை 10,655 பேருக்­குத் தொண்டை சளி மற்­றும் ரத்த மாதி­ரி­கள் எடுக்­கப்­பட்டு சோத­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன. இது­வரை கொரோனா கிரு­மித் தொற்­றால் 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இது­வரை 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்," என்­றார் பீலா ராஜேஷ்

தமி­ழ­கத்­தில் கிரு­மித் தொற்­றுப் பாதிப்­பைக் கண்­ட­றிய 14 அர­சுப் பரி­சோ­தனை மையங்­களும் 9 தனி­யார் மையங்­களும் இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், நாள்­தோ­றும் 2 ஆயி­ரம் பேருக்கு ரத்த மாதி­ரி­கள் எடுக்­கப்­பட்டு பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மாநி­லம் முழு­வ­தும் தொற்று நோய்க் கட்­டுப்­ப­டுத்­து­தல் திட்­டம் தற்­போது 34 மாவட்­டங்­களில் உள்ள 459 இடங்­களில் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் இதன்­மூ­லம் 20 லட்­சத்து 47 ஆயி­ரம் வீடு­களில் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் பீலா ராஜேஷ் கூறி­னார்.

இந்த வீடு­களில் இருந்த சுமார் 83 லட்­சம் பேருக்கு முதற்­கட்ட சோத­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தொற்­று­நோய் கட்­டுப்­ப­டுத்­து­தல் பணி­யில் 34,797 களப்­ப­ணி­யா­ளர்­கள் ஈடு­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை சென்­னை­யில்­தான் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு அதி­க­முள்­ளது. இது­வரை 2 அரசு மருத்­து­வர்­கள், 2 ரயில்வே மருத்­து­வர்­கள் மற்­றும் 4 தனி­யார் மருத்­து­வர்­க­ளுக்­குக் கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது," என்று பீலா ராஜேஷ் கூறினார்.

7 வார்டுகளைச் சேர்ந்த மக்கள் முடக்கப்பட்டனர்

வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி: விழுப்புரம்: கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் நகரில் 7 வார்டுகள் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும் காய்கறி, மளிகைச் சாமான்கள் போன்றவற்றை வாங்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் இதற்காக நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

344 பேர் தாயகம் திரும்பினர்

சென்னை: அமெரிக்கா, ஜப்பானைச் சேர்ந்த 344 சுற்றுலாப் பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னையிலிருந்து தாயகம் திரும்பினர்.

நேற்று முன்தினம் சென்னையிலிருந்து மும்பை வழியாக அமெரிக்காவுக்கு 96 பயணிகளும் ஜப்பானுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் 248 பேரும் பயணம் செய்தனர்.

இறுதிச்சடங்குக்கு கட்டுப்பாடுகள்

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழப்­ப­வ­ரின் உடல் அடக்­கத்­தின்­போது நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­படும் என சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நோய்த்­தொற்­றால் உயி­ரி­ழப்­போ­ரின் உடலை சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் எவ்­வாறு கையாள வேண்­டும், உடல் அடக்­கம், தக­னம் செய்­யப்­படும் இடங்­களில் பின்­பற்ற வேண்­டிய வழி­மு­றை­கள் குறித்து அந்த அமைச்சு சில அறி­வு­ரை­களை வழங்­கி­யுள்­ளது. இறந்­த­வர்­க­ளின் உட­லைப் பெரிய பிளாஸ்­டிக் பையில் வைத்து முழு­மை­யா­கச் சுற்றவேண்­டும். பின்­னர் அந்த பிளாஸ்­டிக் உறை­யின்­மீது சோடி­யம் ஹைப்­போ­கு­ளோ­ரைடு தெளிக்­கப்­பட வேண்­டும். உட­லைக் கையா­ளு­ப­வர்­கள் முகக்­க­வ­சம், கையுறை அணியவேண்­டும் என சுகா­தார அமைச்சு தெரிவித்துள்ளது. "இறந்­த­வர் உடலை உற­வி­னர்­கள் பார்க்க விரும்­பி­னால் மருத்­து­வப் பணி­யா­ளர் முகத்தை மட்­டும் திறந்து காட்­ட­லாம். அவ­ரைத் தவிர உட­லைத் தொட யாருக்­கும் அனு­மதி இல்லை. இறந்­த­வ­ரின் உட­லைத் தொடு­வ­தற்கு அவ­சி­ய­மில்­லாத மதச்­ச­டங்­கு­க­ளைச் செய்ய அனு­மதி உண்டு," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்ளது.

ஒரு வயது குழந்தைக்கு பாதிப்பு

திருச்சியில் தந்தை மூலம் ஒரு வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக நான்கு பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா கிருமித் தொற்றுக்காக 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஒரு வயது குழந்தைக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சும் பொதுமக்கள் வீட்டு பால்கனி, மொட்டை மாடிகளில் இருந்தபடி அண்டை வீட்டாரை நலம் விசாரித்து வருகின்றனர்.