முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்

1 mins read
5db5abc5-0470-4388-beef-4deff9194ab5
கொவிட்-19 ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஈரச்சந்தைகளில் "வீட்டில் இரு, விலகி இரு" என்னும் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎப்பி -

சென்னை: முகக்­க­வ­சம் அணி யாமல் வெளியே சென்­று­வ­ரும் சென்­னை­வா­சி­க­ளி­டம் காவல்­துறை நேற்று முதல் ரூ.500 அப­ரா­தம் வசூ­லித்து வரு­கிறது.

"முகக்­க­வ­சம் அணி­யா­மல் பொது இடங்­க­ளுக்கு வரு­ப­வர் களி­டம் ரூ.500 அப­ரா­தம் வசூ லிக்­கப்­ப­டு­கிறது. நடந்து சென்றா லும் வாக­னங்­களில் சென்­றா­லும் முகக்கவ­சம் அணியாமல் சென்றால் ரூ.500 அப­ரா­தம் விதிக்­கப்படும்," என காவல்­துறை அறி­வித்துள்­ளது.

கோவை, திருப்­பூர் மாவட்­டங் களிலும் முகக்­க­வ­சம் கட்­டா­யம் என்று அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­கள் உத்­த­ரவு பிறப்­பித்­த­னர்.

சென்­னை­யி­லும் முகக் கவ­சம் அணி­வது கட்­டா­யம் ஆக்­கப்­பட்டு உள்­ளது ­பற்றி சென்னை ந­கர மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ் நேற்று வெளி­யிட்­டுள்ள உத்­த­ர­வில், "வீடு­களில் இருந்து வெளியே வரு­ப­வர்­கள் கட்­டா­யம் அவர்­கள் எவ்­வ­ளவு நேரம் நட­மாடுகிறார் களோ அது­வ­ரை­யில் முகக் கவ­சம் அணி­ய­வேண்­டும்.

"இந்த உத்­த­ரவை மீறினால் அவர்­கள் வெளி­யில் செல்­வ­தற்­காக வழங்­கப்­படும் அனு­மதி பாஸ் ரத்து செய்­யப்­படும். வாக­னங்­களும் பறி முதல் செய்­யப்­படும். இந்த உத்­த­ரவு உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­கிறது," என கூறப்பட்­டுள்­ளது.

இதற்கிடையே, பொது இடங்­க­ளுக்கு வரும் காவல்­து­றை­யி­னர் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரும் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டும் என்று கோவை மாவட்ட ஆட்­சி­யர் கு. ராசா­மணியும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். முகக்­க­வ­சம் அணி­யா­மல் வெளியே வரு­ப­வர்­கள் மீது சட்டரீதி­யாக கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வும் ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.