வறுமையிலும் ரூ.500 நிதி வழங்கிய கூலித் தொழிலாளி

வறுமையிலும் ரூ.500 நிதி வழங்கிய கூலித் தொழிலாளி

1 mins read
f4cb3a4a-aaa4-4c52-a4a6-c05ba51f6458
ரமேஷ். படம்: ஊடகம் -

திண்டிவனம்: அரசு உதவிகள் எதையும் பெறமுடியாத சூழலிலும் இருளர் குடும்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் கொரோனாவை துைடத்தொழிக்கும் பணிக்காக ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் தொகுதி, கீழ்பாதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர், ரமேஷ், 32. கூலித்தொழிலாளியான இவர், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 500 வழங்கி வறுமையிலும் தனது தயாள குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கீழ்பாதி கிராமத்தில் ஒதுக்குப்புற மான பகுதியில் எட்டு இருளர் குடும்பத்தினர் குடிசைகளில் வசிக் கின்றனர். ஊரடங்கு நிவாரணமாக அரசு அறிவித்துள்ள ரூ. 1,000, இலவச மளிகைப் பொருட்கள் என எதையும் பெறமுடியாமல் இவர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், "மக்கள் நன்றாக இருந்தால்தான் நாங்கள் வாழ முடியும். கூலி வேலை செய்து சேர்த்துவைத்த 500 ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளேன். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.