தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு

2 mins read
b1bfc54e-5012-46d8-a005-f377b21004b5
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்க இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாழும் வெளிமாநில ஊழியர்களுக்கு அம்மாநில அரசு தங்குவதற்கு இடமும் உணவும் அளிப்பதோடு உடற்பயிற்சியிலும் ஈடுபடுத்துகிறது. படம்: ஏஎப்பி, அருண்சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் 22 மாவட்­டங்­கள் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­க­முள்ள அபாய பகு­தி­க­ளாக (ஹாட் ஸ்பாட்) அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. இத்­த­க­வலை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் நேற்று 25 பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. கிரு­மித்­தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 1,267ஆக அதி­க­ரித்­தது.

நாடு முழு­வ­தும் மே 3ஆம் தேதி வரை ஊர­டங்கு உத்­த­ரவு அம­லில் இருக்­கும் எனப் பிர­த­மர் மோடி அறி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் மத்­திய அரசு சில முக்­கிய அறி­விப்­பு­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் அவ்­வப்­போது வெளி­யிட்டு வரு­கிறது.

அந்த வகை­யில் தமி­ழ­கத்­தில் உள்ள 22 மாவட்­டங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­கம் உள்­ள­தா­க­வும், அம்­மா­வட்­டங்­கள் அபாய பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

சென்னை, திருச்சி, விழுப்­பு­ரம், திருப்­பூர், தேனி, நாமக்­கல், செங்­கல்­பட்டு, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்­டுக்­கல், தூத்­துக்­குடி, கரூர், விரு­து­ந­கர், கன்­னி­யா­கு­மரி, கட­லூர், திரு­வள்­ளூர், திரு­வா­ரூர், சேலம், நாகை ஆகிய மாவட்­டங்­கள் அபா­யப் பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

தர்­ம­புரி, கிருஷ்­ண­கிரி, மயி­லா­டு­துறை, புதுக்­கோட்டை ஆகிய 4 மாவட்­டங்­களில் மட்­டும் இது­வரை கிரு­மித்­தொற்று பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று உள்­ள­வர்­கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்­டங்­கள் ஹாட் ஸ்பாட் மாவட்­டங்­க­ளாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையே கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு தமி­ழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிவா­ர­ணம் வழங்க வேண்­டும் என திமுக தலை­மை­யி­லான அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருச்சியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 38 பேர் கொவிட் 19 நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.