நிவாரண நிதியாக ரூ.135 கோடி திரண்டது

நிவாரண நிதியாக ரூ.135 கோடி திரண்டது

2 mins read
c15a48e8-c780-4b48-a45c-dff229fdd601
சென்னையில் கொவிட்-19 சோதனைக்கான மாதிரியை சுகாதாரத்துறை ஊழியரிடம் ஒப்படைக்கிறார் ஒரு பெண். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­களை வழங்க தமி­ழக அரசு கொரோனா நிவா­ரண நிதி திரட்டி வரு­கிறது. இதை­ய­டுத்து முதல்­வர் நிவா­ரண நிதிக்கு பல­ரும் நிதி­ய­ளித்து வருகின்­ற­னர்.

இதை­ய­டுத்து கடந்த செவ்வாய்க்கிழமை வரை ரூ.135 கோடி நிதி திரண்­டுள்­ள­தாக தமிழக அரசு தெரி­வித்­துள்­ளது.

முதல்­வர் நிவா­ரண நிதிக்­குப் பொது மக்­கள், திரை­யு­ல­கப் பிர­ப­லங்­கள், வர்த்­தக, தொழில் நிறு­வ­னங்­கள் சார்­பில் நிதி அளிக்கப்பட்டு வரு­கிறது.

ஏப்­ரல் 14 ஆம் தேதி வரை முதல்­வர் நிவா­ரண நிதிக்கு ரூ. 134 கோடியே 63 லட்­சம் நன்­கொ­டை­யாக வந்­தி­ருப்­ப­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதில் அதி­க­பட்­ச­மாக தமிழ்­நாடு போக்­கு­வ­ரத்­துக் கழக ஊழியர்­கள் சார்­பாக 14 கோடியே 10 லட்­சத்து 72 ஆயி­ரத்து 492 ரூபாய் நிதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், ஊர­டங்கு உத்­த­ர­வால் முடங்­கி­யுள்ள ஏழை­க­ளுக்­கும் உத­வும் வகை­யில் நிதி திரட்­டு­வ­தாக கூறி மோச­டி­யில் ஈடு­பட்ட 3 பேரை ஈரோடு போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

சென்­னி­ம­லை­யைச் சேர்ந்த 31 வய­தான சதீஷ்­கு­மார் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் நிர்­வாக அதி­கா­ரி­யாக பணி­யாற்­று­கி­றார்.

கடந்த வாரம் இவரை கைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு­வர், ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யின் பெய­ரைக் குறிப்­பிட்டு, அவ­ரது தலை­மை­யில் நிவா­ரண நிதி திரட்டு­வ­தா­கக் கூறி­யுள்­ளார். மேலும் மருத்­து­வ­மனை சார்­பில் நிதி வழங்­கு­மாறு அந்த நபர் கேட்­டுக் கொண்­ட­தை­ய­டுத்து, மருத்­து­வ­மனை நிர்­வா­கம் மற்­றும் ஊழி­யர்­கள் சார்­பாக 1 லட்­சம் ரூபாய் நிதி திரட்­டித் தரு­வ­தா­கக் கூறி­னார் சதீஷ்­கு­மார்.

இதை­ய­டுத்து நிவா­ரண நிதி­யைப் பெற மூன்று பேர் மருத்­து­வ­ம­னைக்கு வந்­த­னர். அவர்­க­ளி­டம் ஓய்­வு­பெற்ற நீதி­பதி குறித்து பேசி­ய­போது முன்­னுக்­குப் பின் முர­ணான தக­வல்­களை தெரி­வித்த மூவர் மீதும் சதீஷ்­கு­மா­ருக்கு சந்­தே­கம் ஏற்­பட, போலி­சுக்­குத் தக­வல் தெரி­வித்­தார். விரைந்து வந்த போலிசார் விசாரணைக்குப் பின் மூவரையும் கைது செய்தனர்.