அகமதாபாத்: 'ஒரே இடத்தில் பலர் கூடாதீர்கள்; கிருமியைப் பரப்பும் ஆபத்தை உருவாக்காதீர்கள்' என பலமுறை கேட்டுக்கொண்டாலும் மக்களில் ஒருசிலர் அதனைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை என்பதற்கு குஜராத்தின் அகமதாபாத் நகரம் பொருத்தமான உதாரணம். மே 3 வரை ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் அந்த நகரிலுள்ள சந்தையில் பெருங்கூட்டம் கூடியது. பாதுகாப்பு இடைவெளியை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்றும் மக்களின் அலட்சியத்தால் கொரோனா கிருமிப் பரவல் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அகமதாபாத் நகரமன்ற ஆணையர் விஜய் நெஹ்ரா கூறினார். குஜராத் மாநிலத்தின் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களில் 50 விழுக்காடு அகமதாபாத்தில்தான் உள்ளது என்றார் அவர். வியாழக்கிழமை மட்டும் இந்நகரில் 93 பேரை கிருமி தொற்றியது.
குஜராத்துக்கு தலைவலியாக மாறிய நகரம்
1 mins read
அகமதாபாத் சந்தையில் நேற்று முன்தினம் காணப்பட்ட கூட்டம். படம்: ஏஎஃப்பி -

