'கொரோனா கொண்டாட்டம்' என கறி விருந்து நடத்தி ஃபேஸ்புக்கில் நேரலை செய்த கும்பல்: ஒருவர் கைது

'கொரோனா கொண்டாட்டம்' என கறி விருந்து நடத்தி ஃபேஸ்புக்கில் நேரலை செய்த கும்பல்: ஒருவர் கைது

1 mins read
f824b116-2d7e-4fdf-a548-4f09a658ec10
சென்னையில் காய்கறிச் சந்தை ஒன்றில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் கலைக்கூத்தாடி. படம்: ஏஎப்பி,அருண் சங்கர் -

கும்­ப­கோ­ணம்: கும்­ப­கோ­ணம் அருகே உள்­ளது தியா­க­ச­முத்­தி­ரம் என்­னும் கிரா­மம்.

இந்த கிரா­மத்­தைச் சேர்ந்த இளை­ஞர்­கள் சிலர் கொரோ­னா­விற்­கா­கப் பிறப்­பிக்­கப்­பட்ட ஊர­டங்கு நேரத்­தில் கிடா வெட்­டிக் கொண்­டாட நினைத்­த­னர். அதன்­படி மற்ற இளை­ஞர்­க­ளுக்­கும் தக­வல் கூறி­ய­து­டன் நேற்று முன்­தி­னம் கிரா­மத்­தின் திறந்­த­வெ­ளி­யில் கிடா வெட்டி சமைத்­த­னர். இதை­ய­றிந்த பெரி­ய­வர்­கள் மற்­றும் சிறு­வர்­கள் அந்த இடத்­தில் திரண்­ட­னர்.

தலை­வாழை இலை­களை ஒன்­றோடு ஒன்று சேர்த்து நீள­மாக வைத்து சோறு பரி­மா­றி­ய­போது ஒரு­வர் கறிக் குழம்பை ஊற்­றிக்­கொண்டே வர 50க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள், சிறு­வர்­கள் நெருக் கமாக அமர்ந்து விருந்து சாப்­பிட்­ட­னர். இதை இளை­ஞர் ஒரு­வர், `எங்க ஊரில் கொரோனா கொண்­டாட்­டம் நடை­பெ­று­கிறது' என தலைப்பிட்டு ஃபேஸ்புக்­கில் காணொ­ளி­யாக நேரலை செய்­தார்.

அந்த காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­ய­தைத் தொடர்ந்து கபிஸ்­த­லம் போலி­சார் சிவ­குரு, 29, என்பவரைக் கைது செய்­த­னர். மேலும் சக்­தி­வேல்,சங்­கர், மணி­கண்­டன் உள்­ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்­துள்­ள­னர். சிவ­கு­ரு­வி­டம் போலி­சார் விசா­ரித்­த­போது, "சும்மா ஜாலிக்­கா­கச் செய்­தோம்," எனக் கூறி­ய­தா­கத் தெரி­கிறது. அர­சின் உத்­த­ரவை மதிக்­கா­மல், கொரோ­னா­வின் அபா­யத்­தை­யும் உண­ரா­மல் இளை­யர்­கள் இவ்­வாறு நடந்­து­கொண்­டது வேத­னை­ய­ளிப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கூறி­னர்.