வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இரு வாரங்களுக்கு முன்னர் மூவருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இப்போது மூவரும் முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவர்கள், தாதியர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர்க்கொல்லி நோயான கொரோனா கிருமித் தொற்றில் இருந்து மீண்டு வந்த மூவருக்கும் கூடை நிறைய பழங்களைக் கொடுத்து, கரவோசை எழுப்பி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். படம்: ஊடகம்
கிருமித் தொற்றில் இருந்து மீண்ட மூவரை கை தட்டி உற்சாகப்படுத்திய மருத்துவர்கள்
1 mins read
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவர்கள், தாதியர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர்க்கொல்லி நோயான கொரோனா கிருமித் தொற்றில் இருந்து மீண்டு வந்த மூவருக்கும் கூடை நிறைய பழங்களைக் கொடுத்து, கரவோசை எழுப்பி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். படம்: ஊடகம் -

