சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோ ரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒரு சில நாட்க ளாக இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 365 பேராக அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் நிம்மதி அைடந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு மருத்துவப் பரி சோதனை நடைமுறையில் செய்த மாற்றமே காரணமாக இருக்கலாம் என்றும் உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே இந்த சோத னைகள் நடத்தப்பட்டு வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இருந் தால் மட்டுமே கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் மேற்கண்ட 4 அறிகுறி களில் ஏதேனும் இரண்டு இருந்தா லும் கிருமித் தொற்று பரிசோதனை களை மேற்கொள்ளும்படி உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
அதன்படி தற்போது தமிழகத்தில் லேசான சளி, காய்ச்சல் இருந்தால் கூட அனைவருக்கும் விரைவாக பரிசோதனை செய்வதாலேயே இந்த பாதிப்புகள் குறைந்துள்ளன.
இன்னும் சில நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்று ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், "தமிழகத் தில் இதுவரை 35,035 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது.
"சோதனைக்கு வந்த 5,363 பேரில் 49 பேருக்கு கிருமி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்து உள்ளது. நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
"கடந்த இரு நாட்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15ஆக உள்ளது. அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவதில் முதன்மை மாநிலமாக இந்திய அளவில் தமிழகம் திகழ்வதாகவும் இறப்பு வீதம் கூட 1.1% ஆகவே உள்ளது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

