ஒரேநாளில் 105 பேர் அனுமதி; சென்னையில் அதிகம்

ஒரேநாளில் 105 பேர் அனுமதி; சென்னையில் அதிகம்

1 mins read
2f0b9e42-09c4-40c0-be52-10851627acea
சென்னையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில ஊழியர்களுக்கு பாதுகாப்பான இடைவெளியில் உடற்பயிற்சி வழங்கப்படுகிறது. படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 1,500ஐ நெருங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரே நாளில் புதிதாக 105 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 85,253 பேர் இல்லம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று 5,840 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 105 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

"சென்னையில் கிருமித் தொற்றால் உயிரிழந்த மருத்துவரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.