சென்னை: கொரோனா கிருமியை மக்கள் மத்தியில் இருந்து துடைத்ெதாழிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த உள்ளதால் தமிழகத்தில் தளர்வுகள் எதுவும் இல்லை. ஊரடங்கு வழக்கம்போல மே 3 வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு அரசு ஏற்கெனவே அளித்த விலக்குகள் தொடரும் எனவும் நோய்த்ெதாற்று குறைந்தால் வல்லுநர் குழு ஆலோசனையின் படி நிலைமைக்குத் தகுந்தாற்போல் மீண்டும் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்திற்கு கூடு தலாகப் பரிசோதனைக் கருவிகள் வழங்கவேண்டும் என்று பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

