உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 20 பேர் கைது

உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 20 பேர் கைது

2 mins read

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றின் பாதிப்­பால் இறந்து போன மருத்­து­வர் உடலை அடக்­கம் செய்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்த 20 பேரை காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர்.

சென்னை கீழ்ப்­பாக்­கத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்றி வந்த மருத்­து­வ­ருக்கு அண்­மை­யில் கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்டு வான­ க­ரத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அளிக்கப்பட்ட சிகிச்­சை பல­னின்றி பலி­யா­னார்.

இதை­ய­டுத்து அவ­ரது உடலை சென்னை கீழ்ப்­பாக்­கத்­தில் உள்ள இடு­காட்­டில் அடக்­கம் செய்­வ­தற்கு அப்­ப­குதி மக்­கள் எதிர்ப்பு தெரி வித்­த­னர். அத்­து­டன் ஆம்­பு­லன்ஸ் ஊழி­யர்­கள் மீதும் அவர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இதை­ய­டுத்து அவ­ரது உடல் அரு­கி­லுள்ள வேலங்­காடு இடு காட்­டில் பலத்த காவல்­துறை பாதுகாப்­பு­டன் அடக்­கம் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் மருத்­து­வ­ரின் உடலை அடக்­கம் செய்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்த 20 பேர் மீது காவல்­து­றை­யி­னர் 7 பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து அவர் களைக் கைது செய்­த­னர்.

இதற்­கி­டையே இந்­தக் கிருமி யால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடலை எங்­கள் ஆண்­டாள் அழ­கர் கல்­லூரி வளா­கத்­தி­லேயே அடக்­கம் செய்­து­கொள்­ள­லாம் என்று தேமு­திக தலை­வர் விஜயகாந்த் அறி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து அவர் வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யில், "மருத்து வரின் உடலை அடக்­கம் செய்ய பொது­மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்த செய்­தி­யைக் கேட்டு அதிர்ச்சி அடைந்­தேன். மக்­கள் பணி­யாற்­றிய ஒரு மருத்­து­வ­ருக்கே இந்த நிலைமை என்­றால் சாமா­னிய மக்­க­ளின் நிலை­மையை எண்­ணிப் பார்க்­க­வேண்­டும். கொரோனாவால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உடலை அடக்­கம் செய்­வ­தால் எந்த பாதிப்­பும் இல்லை என அர­சும் உலக சுகா­தார நிறு­வ­ன­மும் கூறி­யும் மக்­கள் எதிர்ப்பு தெரி­விப்­பது வருத்­தம் அளிக்­கிறது," என்று கூறி­யுள்­ளார்.