மருத்துவர்கள் கடவுள்கள்: அன்புமணி வலியுறுத்து

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து மக்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கான போராட்­டத்­தில் தங்­க­ளின் உயிரை இழந்த மருத்­து­வர்­க­ளுக்கு அவ­ம­திப்­பு­களை இழைப்­பது கண்­டிக்­கத்­தக்­கது என பாமக இளை­ய­ர­ணித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மருத்­து­வர்­களை கட­வுள்­க­ளாக பார்க்க வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

“சென்­னை­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட மருத்­து­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தது பெரும் அதிர்ச்சி அளித்­தது என்­றால், அவ­ரது உடலை கீழ்ப்­பாக்­கம் இடு­காட்­டில் அடக்­கம் செய்ய எதிர்ப்பு தெரி­வித்து அப்­ப­குதி மக்­கள் போராட்­டம் செய்­த­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்­கள் இன்­னும் அதிக வேத­னையை அளிக்­கிறது.

“போர்க்­கா­லங்­களில் நாட்­டைக் காக்க தங்­க­ளின் உயிரை பண­யம் வைத்து போர் புரி­ப­வர்­கள் நமது ராணுவ வீரர்­கள்­தான். அதே­போல், கண்­ணுக்கு தெரி­யாத எதி­ரி­யான கொரோனா வைரஸ் கிரு­மியை எதிர்த்து களத்­தில் நின்று போராடுபவர்­கள் மருத்­து­வர்­கள்­தான். அவர்­களை நாம் கட­வு­ளாக பார்க்க வேண்­டும்,” என அன்­பு­மணி தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டைக் காக்­கும் போரில் உயி­ரி­ழந்த ராணுவ வீரர்­களை 21 குண்­டு­கள் முழங்க ராணுவ மரி­யா­தை­யு­டன் இறு­திச்­ச­டங்கு செய்­யப்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், அதே­போல் மக்­க­ளைக் காக்க கொரோனா கிரு­மி­யு­டன் போரிட்டு உயி­ரி­ழக்­கும் மருத்­து­வர்­க­ளுக்­கும் இறுதி மரி­யாதை செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

“ஒரு­வேளை அந்த அள­வுக்கு பெரிய மனசு இல்­லா­விட்­டா­லும், குறைந்­த­பட்­சம் மனி­தர்­க­ளா­க­வா­வது கருதி மருத்­து­வர்­க­ளின் உடல்­க­ளுக்கு இறு­திச்­ச­டங்கு செய்ய பொது­மக்­கள் அனு­ம­திக்க வேண்­டும்,” என அன்­பு­மணி மேலும் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!