இடுகாட்டில் வாழ்க்கை

இடுகாட்டில் வாழ்க்கை

1 mins read

விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த 29 வயதான பிரமிளாவின் கணவர் கூலி வேலைக்காக பெங்களூரு சென்ற நிலையில், ஊரடங்கு காரணமாக ஊர்திரும்பவில்லை. இதனால் தமது ஆறு குழந்தைகள், கணவரின் தாத்தா, பாட்டியுடன் உணவுக்கு வழியின்றி களத்தம்பட்டியில் உள்ள இடுகாட்டில் காத்திருப்போர் அறையில் தங்கியுள்ளார் பிரமீளா. இது குறித்து ஊடகங்களில் தகவல் வெளியானதையடுத்து மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு பணமாகவும் பொருளாகவும் கொடுத்து உதவியளித்தனர். அந்தக் குடும்பம் தங்க மாற்று இடம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.