76 பேருக்கு கிருமி பாதிப்பு

76 பேருக்கு கிருமி பாதிப்பு

1 mins read
f72df373-fcd9-46a7-8041-d5104a958617
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ரிக்‌ஷா ஓட்டுநர் சவாரி ஏதும் இன்றி ஓய்வெடுக்கிறார். அவருடைய செல்லப்பிராணி ஒன்று வெறிச்சோடிக் கிடக்கும் சாலையை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறது. படம்: ஏஎப்பி/அருண் சங்கர; -

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். இதையடுத்து சென்னையில்

கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 1,596 ஆகும்.