'செல்ஃபி' எடுக்கச் சொல்லும் மாநகராட்சி

'செல்ஃபி' எடுக்கச் சொல்லும் மாநகராட்சி

1 mins read

சென்னை: பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி சவால் விடுத்துள்ளது. 'சென்னையே சவாலுக்கு தயாரா' என்ற தலைப்பில் அந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.