சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னையில் சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கி.மீட்டர் தொலைவுக்கு அண்ணாசாலை மூடப்பட்டது.
மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படும் சூழலில் சென்னையில் மட்டும் 360 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். தலைநகரில் 144 தடை உத்தரவு நடப்பில் உள்ளது. மேலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க அண்ணாசாலை முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

