திருப்பூர்: உலகிற்குப் பின்னலாடை வழங்கி வரும் திருப்பூர், இனி மருத்துவ ஆடை தயாரிப்பு துறையிலும் தனது தடத்தைப் பதிக்க முனைப்பு காட்டத் தொடங்கி உள்ளது.
கொரோனா கிருமித்தொற்று சூழலில் உலகளாவிய மருத்துவ ஆடை தயாரிப்புத் துறையில் இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான தருவிப்பு ஆணைகள் கிடைக்கக்கூடும் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார். பின்னலாடை துறையினர் மருத்துவ ஆடைகள் தயாரிப்பதற்கும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

