அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதத்தில் விஜய் ரசிகர் பலி

விழுப்­பு­ரம்: கொரோனா நிவா­ரண நிதியை மனதார அதி­கம் அள்ளிக் கொடுத்தது ரஜி­னியா, விஜய்யா என்று இரு­த­ரப்பு ரசி­கர்­கள் வாக்கு­வா­தம் செய்­துள்­ள­னர். இந்த வாக்­கு­வா­தம் ேமாதலாக முற்­றிப்­போக விஜய் ரசி­கரை ரஜினி ரசி­கர் தாக்­கி­ய­தில் அவர் சம்பவ இடத்திலேயே உயி­ரி­ழந்தார்.

விழுப்­பு­ரம் மாவட்­டம், மரக் காணம், சந்­தி­காப்­பான் கோயில் தெரு­வைச் சேர்ந்­த­வர் முரு­கன். இவ­ரது மகன் யுவ­ராஜ், 22. விஜய் ரசி­கரான இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவ­ரது வீட்­டின் அரு­கில் வசிப்­ப­வர் ஆறு­மு­கம். இவ­ரது மகன் தினேஷ்­பாபு, 22. தொலைக்காட்சியைப் பழுதுபார்ப்ப வரான இவர் ரஜினி ரசி­கராவார். இவர்­கள் இரு­வ­ரும் நண்­பர்­கள்.

ஊர­டங்கு உத்தரவு கார­ண­மாக வேலைக்­குச் செல்­லா­த நண்­பர்­கள் இரு­வ­ரும் வீட்­டி­லேயே மது அருந்தி­விட்டு பேசிக்­கொண்­டி­ருந்­த­­போது, “என் தலை­வர் விஜய்­தான் கொரோனா நிதியை அள்­ளிக்­கொ­டுத்துள்ளார். ஆனால், உன் தலை­வர் கொஞ்­சமாக கிள்­ளித்­தான் கொடுத்துள் ளார்,” என கூறியுள்ளார் யுவ­ராஜ்.

இந்த வாக்­கு­வா­தம் கைக­லப்­பாக முற்­றி­ய­தால் இரு­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக்­கொண்­ட­னர். ஒரு­சமயத்தில் யுவ­ராஜை கீழே தள்­ளிய தினேஷ்­பாபு, அரு­கில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

“என் நண்பனை நானே என் கைகளால் சாகடித்துவிட்டேன். அவன் இல்லாமல் எப்படி இருப்பேன். ரொம்ப நல்லவன் சார் அவன்,” என்று கூறி தினேஷ்­பா­பு கதறி அழுததாக அவரைக் கைது செய்த மரக்­கா­ணம் காவல்துறை போலி சார் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!