மதுரை: மக்கள் பலரும் தங்கள் வாகனங்களுக்கான 'இ-பாஸ்' அனுமதிச் சீட்டைப் பெறுவதற்காக சமூக இடைவெளி விதிமுறையைப் பின்பற்றாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட தால் நுழைவாயில் மூடப்பட்டது.
அத்துடன் நேரம் ெசல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், பழைய நிலையே தொடரும் என்றும் மாவட்ட நிர் வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நேரத்தில், மதுரையில் வாகனங்களைக் குறிப்பிட்ட வேளை களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் 'இ-பாஸ்' மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ேநற்று வழங்கப்படுவதாக தகவல் வெளி யானது.
இதையடுத்து பொதுமக்களில் பலரும் சமூக இடைவெளி விதி முறைகளைக் கடைப்பிடிக்காமல் சுய பாதுகாப்பிற்கான முகக் கவசத்தையும் அணியாமல் வாகன 'இ-பாஸ்' பெற வந்திருந்தனர்.
மதுரையில் அனுமதிச் சீட்டு பெறாத வாகனங்கள் சனிக்கிழமை முதல் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, 'இ-பாஸ்' பெறுவதற்காக ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி மக்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர்.
அரசு அலுவலா்கள், பத்திரிகை யாளா்கள், அத்தியாவசியப் பணி யில் இருப்பவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அனுமதிச் சீட்டு பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அனுமதிச் சீட்டு பெறுவதற்கு ேநற்று ஒருநாள் மட்டுமே அவகாசம் இருந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியா் அலு வலகத்தில் ஏராளமானோர் குவிந்த னர்.
அனைத்துத் தரப்பினரும் அனுமதிச் சீட்டு பெறும் வகையில் முறையான தடுப்புகள் அமைத்து வரிசைப்படுத்துவது உள்ளிட்ட எந்த ஒரு முன்னேற்பாடுகளும் மாவட்ட நிா்வாகம் செய்யாதிருந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

