மன அழுத்தம் வராமலிருக்க வெளி மாநில ஊழியர்களுக்கு உடற்பயிற்சி, ஆலோசனை சேவை

மன அழுத்தம் வராமலிருக்க வெளி மாநில ஊழியர்களுக்கு உடற்பயிற்சி, ஆலோசனை சேவை

1 mins read
2fccbdc3-123e-4dbd-93eb-dbb1a009549c
படம்: ஏஎஃப்பி -

தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் வெளிமாநில ஊழியர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் கவனம் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு உடற்பயிற்சி வழங்குவதுடன் மனநல ஆலோசனையும் வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் 3,800 முகாம்களில் 1,88,582 வட மாநிலத் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வும் இதில் சென்னையில் மட்டும் 51 முகாம்களில் 3,000 போ் தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வேலை இல்லாதது, சொந்த ஊருக்குச் செல்லமுடியாதது, கொரோனா அச்சம் காரணமாக இந்த தொழிலாளா்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற தொழிலாளா்களுக்கு காவல் துறையும் மாநிலச் சங்க நிா்வாகிகளும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். தொழிலாளா்களுக்கு யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து முகாம்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.படம்: ஏஎஃப்பி