முழு ஊரடங்கு: தமிழகத்தில் பல நகர்கள் வெறிச்சோடின

2 mins read
8969a477-9d43-4bfa-acf7-b9e508f9870b
சென்னை நகரில் நேற்று முதல் இம்மாதம் 29 வரை முழு ஊரடங்கு நடப்புக்கு வந்தது. அதற்கு முன்னதாக முடக்கம் காரணமாக சாப்பாடு இல்லாமல் பசியுடன் திரிந்த பூனைகளுக்குத் தொண்டூழியர் ஒருவர் உணவளித்தார். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் கிரா­மப் புறங்­களில் கொரோனா தொற்று அவ்­வ­ள­வாக இல்­லாத நிலை­யில் நகர்­களில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது இன்ன­மும் பெரும் சவா­லாக இருக்­கிறது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

இதன் கார­ண­மாக சென்னை, கோவை, மதுரை உள்­ளிட்ட ஐந்து மாந­க­ராட்­சி­களில் நேற்று முதல் வரும் 29ஆம்­ தேதி வரை முழு ஊர­டங்­கை அரசு நடப்­புக்­குக் கொண்­டு­வந்து உள்­ளது.

சேலம், திருப்­பூர் மாந­க­ராட்சி பகு­தி­களில், நேற்று அதி­காலை முதல் வரும் 28ஆம்­தேதி இரவு 9.00 மணி வரை முழு ஊர­டங்கு அம­லா­னது.

அதே­வே­ளை­யில், சில மாவட்ட ஆட்­சி­யர்­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்து தங்­கள் நிர்­வா­கப் பகு­தி­களில் ஒரு நாள் ஊர­டங்கை நேற்று அமல்­ப­டுத்­தி­னர். இதன் கார­ண­மாக பல நகர்­களில் சாலை­கள் வெறிச்­சோ­டி­ய­தா­க­வும் மயான அமைதி நில­வி­ய­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

தடையை மீறி வெளியே வந்­த­வர்­கள் குறை­வா­கவே இருந்­த­னர் என்­றும் அவர்­களை அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்து திருப்பி அனுப்­பி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

இத­னி­டையே, முழு ஊர­டங்­கின்­போது அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் கிடைக்­காது என்று தவ­றா­கப் புரிந்து­கொண்ட பொது­மக்­கள், காய்­கறி உள்­ளிட்ட அவ­சியமான பொருட்­களை வாங்க சனிக்­கி­ழமை ஒரே நாளில் லட்­சக்­க­ணக்­கில் திரண்­ட­தால் சென்னை உள்­ளிட்ட பல நகர்­க­ளி­லும் கடை­கள் பல­வும் காலை 9 மணிக்கே காலி­யா­யின.

சரக்­கு­கள் விற்­று­த்தீர்ந்­து­விட்­ட­தால் பல மளி­கைக் கடை­களும் சில மணி நேரத்தில் மூடப்­பட்­டன. மாலை 3 மணி வரை கடை­க­ளைத் திறக்க அவ­ச­ர­மாக அர­சாங்­கம் உத்­த­ரவு பிறப்­பித்­தது.

ஆனா­லும் தேவை­யான பொருட்­கள் கிடைக்­கா­மல் ஏராளமான மக்கள் வீடு திரும்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.