கொரோனா: குணமடைவோர் அளவு 52% ஆகக் கூடியது

கொரோனா: குணமடைவோர் அளவு 52% ஆகக் கூடியது

1 mins read
c605a059-e997-4af1-a337-f5b7b8453a89
தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டை­வோர் அளவு 52% ஆகக் கூடி இருக்­கிறது என்­றும் இதை  கொரோனா கிரு­மித்­தொற்று நில­வ­ரம் அறி­யும் மத்­திய குழு பாராட்டி இருப்­ப­தா­க­வும் தமி­ழக சுகாதா­ரத்­துறை அமைச்­சர் டாக்­டர் சி. விஜய­பாஸ்­கர் தெரி­வித்­தார். படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டை­வோர் அளவு 52% ஆகக் கூடி இருக்­கிறது என்­றும் இதை கொரோனா கிரு­மித்­தொற்று நில­வ­ரம் அறி­யும் மத்­திய குழு பாராட்டி இருப்­ப­தா­க­வும் தமி­ழக சுகாதா­ரத்­துறை அமைச்­சர் டாக்­டர் சி. விஜய­பாஸ்­கர் தெரி­வித்­தார்.

"கொரோனா கிருமி தொற்றி இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­ட­வர்­களில் 100 பேரில் 41 பேர் குண­ம­டைந்து வந்­த­னர். இப்­போது அந்த அளவு 52% ஆகக் கூடி இருக்­கிறது. மொத்­தம் 960 பேர் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர். குண­ம­டை­வோர் அளவு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

மாநி­லத்­தில் நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 1,821 பேர் கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். மரண எண்­ணிக்கை 23 ஆக இரு­ந்தது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில்­தான் தொற்று அதி­க­மாக இருக்­கிறது என்று கூறிய அமைச்­சர், சனிக்­கி­ழமை அந்­ந­க­ரில் புதி­தாக 43 பேர் பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

சென்­னை­யில் சனிக்­கி­ழமை 34 வய­துள்ள ஆட­வர் ஒரு­வர் மர­ணம் அடைந்­து­விட்­டார். இது­வரை கொரோ­னா­வுக்­குப் பலி­யாகி இருப்­போ­ரில் இவ­ருக்­குத்­தான் வயது மிக­வும் குறைவு என்­ப­தால் அவ­ரது உடலைப் பரி­சோதிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளதாக அவர் கூறினார்.