பணப்புழக்கம் இல்லை; அரியலூரில் பண்டம் மாற்று வர்த்தகம்

பணப்புழக்கம் இல்லை; அரியலூரில் பண்டம் மாற்று வர்த்தகம்

2 mins read
f42efec1-7f25-4994-8668-01a5879ee832
-

அரி­ய­லூர்: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக தமிழ்­நாட்­டில் மக்­கள் வீடு­க­ளி­லேயே முடங்கி கிடக்கி­றார்­கள். பணப்­பு­ழக்­கம் குறைந்­து­விட்­டது. வேலை­யும் இல்லை. இந்­தச் சூழ­லில் அரியலூர் மாவட்­டத்­தின் கிரா­மப் பகு­தி­களில் பழைய பாணி பண்டமாற்று வர்த்தக ­முறை தலைதூக்கி உள்ளது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாநி­லமே முடங்கி இருப்­ப­தால் மக்­களில் சிலர் பட்­டினி கிடப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கிரா­மப் புறங்­களில் விளைந்து கிடக்­கும் பொருட்­களை விற்க முடி­ய­வில்லை. இந்த நிலை­யில் காய்­கறி, நெல், மிள­காய் போன்ற பொருட்­களை வாங்­கு­வ­தற்கு பண்­ட­மாற்று வர்த்­தக முறையைக் கிரா­மத்­தி­னர் பின்­பற்­று­கி­றார்­கள்.

"என்­னு­டைய நிலத்­தில் மிள­காய், நிலக்­க­டலை விளைந்து இருக்­கிறது. ஆனால் எனக்கு நெல் வேண்­டும். ஆகை­யால் 25 கிலோ மிள­கா­யைக் கொடுத்­து­விட்டு இரண்­டரை மூட்டை நெல்லை வாங்­கி­னேன்," என செட்டி திருக்­கோ­ணம் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த ஆர். ராஜா என்­ப­வர் கூறி­னார்.

"பண்­ட­மாற்று வர்த்­த­கத்­தில் தர­கர் கிடை­யாது, தில்­லு­முல்லு இல்லை. கடன் அட்­டையோ, பற்று அட்­டையோ தேவை­யில்லை. பணப்­பு­ழக்­க­மும் அவ­சி­ய­மில்லை. ஆகை­யால் இது மிக­வும் வச­தி­யாக இருக்­கிறது," என்று டி. கரு­ணா­நிதி என்­ப­வர் கூறி­னார்.

"நான் இரண்­டரை மூட்டை நெல்லை கொடுத்­து­விட்டு மிள­காயை வாங்­கி­னேன். காய்­க­றி­களை­யும் இதே போல் வாங்­கிக்­கொள்­கி­றோம். விளை பொருள்­களை வெளியே கொண்டு சென்று விற்க முடி­ய­வில்லை. ஆகை­யால் எங்­கள் கிரா­மத்­தில் பண்­ட­மாற்று வர்த்­த­கம் சூடு­பி­டிக்­கிறது," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

"நேர­டி­யாக கொடுக்­கல் வாங்­கல் நடப்­ப­தால் எல்­லாம் சுமு­க­மாக முடி­கிறது. அறவே பணப்­பு­ழக்­கம் தேவை­யில்­லாத சூழ்­நி­லை­யும் ஏற்­படு­கிறது," என்றாரவர்.