சென்னை: 168 பகுதிகளில் கண்காணிப்பு; மிரட்டலாக உருவெடுக்கும் மருத்துவமனை

சென்னை: 168 பகுதிகளில் கண்காணிப்பு; மிரட்டலாக உருவெடுக்கும் மருத்துவமனை

2 mins read
e494c1b4-86e5-4ed1-a0e0-d47495cb6c86
சைனகுண்டா, பொன்னை என்ற இரண்டு சாவடிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகம் என்றும் ஒருவர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்தச் சாவடிகள் அருகே சாலையில் சுவர்கள் 3 அடி உயரத்துக்கு எழுப்பப்படுவதால் இரு சக்கர வாகனங்களும் அந்த வழிகள் மூலம் வேலூருக்குள் வர முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இருந்தாலும் இரு மாநில எல்லையில் இருக்கும் இதர நான்கு சோதனைச் சாவடிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் பெரும்­பா­லான பகு­தி­களில் கொரோனா கிரு­மித்­தொற்று வேகம் குறை­வ­தாகத் தெரிந்­தா­லும் தலை­ந­கர் சென்னை இன்­ன­மும் கவலை தரும் நிலை­யி­லேயே இருக்­கிறது.

அங்கு நேற்று வரை 523 பேரை கிருமி தொற்றி இருந்­தது. நாள்­தோ­றும் குறைந்­த­பட்­சம் 1,500 பேர் சோதிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இந்த நிலை­யில், சென்னை மாந­க­ராட்சி நகரில் 168 இடங்­களைக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகுதி களாக நேற்று அறி­வித்­தது.

கடந்த ஏப்­ரல் மாதம் 17ஆம் தேதி­யன்று இத்­த­கைய இடங்­க­ளின் எண்­ணிக்கை 84 ஆக இருந்­தது.

அந்­தப் பகு­தி­களில் வீடு வீடாக அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி வரு­கி­றார்­கள். அனைத்து மக்­களும் 24 மணி நேர­மும் கண்­கா­ணிக்­கப் படு­கி­றார்­கள்.

சென்­னை­யில் ராய­பு­ரம் பகு­தி­யில்­தான் பாதிப்பு அதி­க­மாக இருக்­கிறது என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் உள்ள ராஜீவ்­காந்தி அர­சாங்க மருத்­து­வ­மனை கிரு­மித்­தொற்று மைய­மாக உரு­வெ­டுக்­கும் மிரட்­டல் ஏற்­பட்டு இருக்­கிறது.

அந்த மருத்­து­வ­ம­னை­யில் குறைந்­த­பட்­சம் ஒன்­பது மருத்­து­வர்­கள், இரண்டு தாதி­யர்­கள், இரண்டு நோயா­ளி­கள், ஒரு மருந்­தா­ளு­நர் ஆகி­யோ­ருக்கு கொரோனா கிருமி தொற்றி இருக்­கிறது.

துப்­பு­ரவு ஊழி­யர் ஒரு­வ­ருக்குக் கிரு­மித்­தொற்று இருந்­ததால் அந்த மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் மருத்து­வர்­கள் தங்கி உள்ள விடுதி மூடப்­பட்­டு­விட்­டது.

அந்த விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த 102 மருத்­து­வர்­க­ளுக்­கும் சோதனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் இரண்டு பேருக்கு கிரு­மித்­தொற்று இருந்­தது தெரி­ய­வந்­த­தா­க­வும் மருத்­து­வ­மனை குறிப்­பிட்­டது.

தமிழ்­நாட்­டில் நேற்­றைய நில­வ­ரப்­படி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 64 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1,885 பேரைக் கிருமி தொற்றி இருந்­தது. 24 பேர் மர­ணம் அடைந்­த­னர். 1,020 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள்.

கொரோனா கிருமித்தொற்று சூழலில் மாநில எல்லைப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் இரண்டு முக்கிய இடங்களில் தடுப்புச் சுவரை தமிழக அரசு கட்டுகிறது.