மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கிராமங்களிலும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த பல டன் நெல் நனைந்து சேதமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகக் கூறினர்.

