பெங்களூரில் இருந்து 2 நாட்கள் இடைவிடாமல் நடந்து வந்த இளையர்கள்

பெங்களூரில் இருந்து 2 நாட்கள் இடைவிடாமல் நடந்து வந்த இளையர்கள்

2 mins read
4684bede-4b43-4307-b9cb-b79e2430273e
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருவாரூர், சிதம்பரத்தைச் சேர்ந்த இந்த ஆறு பேரும் ஊண், உறக்கமின்றி தொடர்ந்து 200 கி.மீ. நடந்து சேலம் வந்தனர். அங்கு போலிஸ் அதிகாரிகள் உதவினர். படம்: தமிழக ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி: கர்­நா­ட­கா­வுக்கு வேலைக்­குச் சென்ற ஆறு பேரை கொரோனா கிருமி தொற்­ற­வில்லை என்­றா­லும் வாழ்க்­கை­யில் இது­நாள்­வரை இல்லாத அள­வுக்கு அவர்­க­ளுக்­குச் சோத­னை­க­ளை­யும் சிர­மங்­க­ளை­யும் கொடுத்­து­விட்­டது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தைச் சேர்ந்த ஜோதி­ராம், 19, ராஜா­பார்த்தி, 20, விக்­னேஷ், 22, ராம­ராஜ், 23, சிதம்­ப­ரத்­தைச் சேர்ந்த அருள், 19, திரு­வா­ரூ­ரைச் சேர்ந்த சுரேந்­தி­ரன், 20, ஆகிய ஆறு பேரும் கர்­நா­டக மாநி­லத்­தில் பெல்­காம் மாவட்­டத்­தில் இணைய வர்த்­தக நிறு­வ­னம் ஒன்­றில் வேலை பார்த்து வந்­த­னர்.

அந்த மாநி­லத்­தில் ஊர­டங்கு நடப்­புக்கு வந்­ததை அடுத்து அவர்­க­ளுக்கு வேலை போய்­விட்­டது. கையில் பணம் இல்­லா­ம­லும் தங்க இடம் இல்­லா­ம­லும் பரி­த­வித்த அந்த ஆறு பேரை­யும் ஒரு வாக­னத்­தில் தமிழ்­நாட்டு எல்­லை­யில் கொண்­டு­வந்து விட்­டு­விட்டு அவ­ரு­டைய முத­லாளி திரும்­பிச் சென்­று­விட்­டார்.

எந்­த­வித ஆத­ர­வும் இன்றி தவித்த அந்த இளை­ஞர்­கள், ஓசூ­ரில் இருந்து கால்­ந­டை­யா­கவே தங்­கள் ஊர்­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்று முடிவு எடுத்து நடக்­கத் தொடங்­கி­னர்.

வழி­யில் ஓய்வு இல்­லா­மல், உண­வில்­லா­மல், உறக்­க­மில்­லா­மல் தொடர்ந்து இரண்டு நாட்­கள் நடை­யாய் நடந்து 200 கி.மீ. தொலை­வில் உள்ள சேலம் நகரை அவர்கள் அடைந்­த­னர்.

அங்கு போலி­சார் அவர்­க­ளைத் தடுத்து நிறுத்தி விசா­ரித்­த­போது ஆறு இளை­ஞர்­களும் தங்­க­ளு­டைய கதி­யைப் பற்றி அதி­கா­ரி­க­ளி­டம் விளக்­கி­னர்.

கருணை உள்­ளம் கொண்ட போலிஸ் அதி­கா­ரி­கள், முதல் வேலை­யாக அந்த ஆறு பேருக்­கும் பசி தீரும் அள­வுக்கு உணவு வாங்­கிக் கொடுத்­த­னர்.

பிறகு விவ­ரங்களை எல்­லாம் கேட்டு அறிந்து லாரி­கள் மூலம் அந்த இளை­ஞர்­களை அவ­ர­வர்­க­ளின் ஊர்­க­ளுக்கு அனுப்பி வைத்­த­னர்.

இப்­படி உத­விய போலிஸ் அதி­கா­ரி­களை அந்த ஆறு பேர் மட்­டு­மின்றி பொது­மக்­களும் பெரி­தும் புகழ்ந்து பாராட்டி வரு­கி­றார்­கள்.