பாதிப்பில்லா 300 மாவட்டங்கள்

2 mins read
58534cc1-9c9b-44b7-9a2b-ce3649d1d5d9
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு முடங்கிக்கிடக்கும் நிலையில், வீடே இல்லாத இவர்கள் சாலையோரத்தில் சமைத்துச் சாப்பிட்டு, அங்கேயே உறங்குகின்றனர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்று ஏழை எளிய மக்­க­ளின் வாழ்­வோடு தொடர்­பு­டைய இந்­தப் பிரச்­சினை என்­றும் இதைக் கையாள்­வ­தில் அனை­வ­ரும் தைரி­ய­மாக இருக்க வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் 300 மாவட்­டங்­களில் தற்­போது கொரோனா கிரு­மித் தொற்று இல்லை என்­றும், அவை அனைத்­தும் புனி­த­மான பகு­தி­க­ளாக மதிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

கிரு­மித்தொற்று தொடர்­பாக நேற்று பிர­த­மர் மோடி மாநில முதல்­வர்­க­ளு­டன் காணொளி வசதி மூலம் கலந்­தா­லோ­ச­னை­யில் ஈடு­பட்­டார். அப்­போது ஊர­டங்கு உத்­த­ரவை மேலும் ஒரு மாதம் நீட்­டிக்க வேண்­டும் என சில மாநி­லங்­கள் கோரிக்கை விடுத்­தன.

இதை­ய­டுத்து பேசிய பிர­த­மர் மோடி, கொரோனா கிரு­மித்தொற்­று­டன் போரா­டிக்கொண்டே நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தை­யும் கவ­னிக்க வேண்டி உள்­ளது என்­றார்.

இனி வரப்­போ­கும் மாதங்­களில் கொரோ­னா­வின் தாக்­கம் நிச்­ச­யம் இருக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், முகக்­க­வ­ச­மும் முக­மூ­டி­களும் வாழ்­வின் அங்­கங்­க­ளாக மாற­லாம் என்­றார்.

சில மாநி­லங்­க­ளின் முதல்­வர்­கள் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து எழுத்து மூலம் சில பரிந்­து­ரை­களை வழங்கி இருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், அவற்­றின் அடிப்­ப­டை­யில் மத்­திய அரசு செயல்­படும் என்­றார்.

பச்சை மண்­ட­லங்­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்­பதே நமது தாரக மந்­தி­ர­மாக இருக்கவேண்­டும் என்­றும் இந்த இக்­கட்­டான சூழ்­நிலை பல­வற்றை சீர்­தி­ருத்­து­வ­தற்­கான வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

"கடந்த ஒன்­றரை மாதங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளைக் காப்­பாற்ற முடிந்­த­தால், பொது முடக்­கம் நமக்கு சாத­க­மான முடி­வு­களை அளித்­துள்­ளது," என்­றார் பிர­த­மர் மோடி.

முடிந்­த­வரை தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், மக்­க­ளின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளை­யும் சரி­செய்ய வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார்.