திருவாரூர்: வெளிநாட்டில் வசித்து வரும் தனது தந்தையுடன் 'வீடியோ கால்' மூலம் இளம்பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது கைபேசி வெடித்துச் சிதறியது.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தால் அவரது பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கைபேசியை சார்ஜரில் போட்டபடி பேசிக்கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்க லத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரு கிறார். இவருடைய மகள் ஆர்த்தி, 18.
இவர் நேற்று காலை வெளி நாட்டில் உள்ள தனது தந்தையுடன் 'வீடியோ கால்' மூலம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.
கைபேசியின் உடைந்த பாகங்களின் துகள்கள் ஆர்த்தியின் கண்கள், காதுகளுக்குள் சென்றதால் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் வலியால் துடிதுடித்தார் ஆர்த்தி. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் அவரை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தஞ்சை மருத்துவமனையில் ஆர்த்தி அனுமதிக்கப்பட்டார்.

