'வெப்பம் குறைவாக உள்ள பகுதிகளில் கிருமித்தொற்று வேகமாகப் பரவும்'

1 mins read

சென்னை: வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிகளில் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவும் என சென்னை ஐஐடி கல்வி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வெப்பநிலையும் புற ஊதா கதிர்வீச்சும் அதிகமுள்ள இடங்களில் நோய்த்தொற்று குறைவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "மொத்தம் 1.7 லட்சம் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. செயற்கையாக புற ஊதா கதிர்களை உருவாக்கினால் சமூகப் பரவலைத் தடுக்க இயலும்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.