தூய்மைப் பணியாளரைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர்

தூய்மைப் பணியாளரைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர்

1 mins read
db181e8e-922a-4371-a86d-130118f36861
-

பெரம்பலூர்: தாயாரின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு மீண்டும் பணிக்குத் திரும்பிய தூய்மைப் பணியாளருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரான அய்யாதுரையின் தாயார் அண்மையில் காலமானார். இதையடுத்து தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்த அவர் உடனடியாகப் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் பழனிசாமி, தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், அய்யாதுரையின் இந்தச் செயல் நெகிழ்ச்சியை அளிப்பதாகவும் மக்களைக் காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.