சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பச்சை நிறப் பகுதிகளில் தொழில்களைத் தொடங்க அரசு தரும் அறி வுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதல்வர், "மக்கள் வெளியில் வரும்போது தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. காய்கறிகள் வாங்க சந்தைக்குச் செல்லும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
"நோய் பாதிப்புள்ள பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. பச்சைப் பகுதி மாவட்டத்தில் படிப் படியாகத் தொழில்களைத் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
"சிவப்பு மாவட்டங்களை ஆரஞ்சு மாவட்டமாகவும் ஆரஞ்சு மாவட்டங்களை பச்சை மாவட்டமாகவும் படிப்படியாக மாற்ற தீவிர கண்காணிப்பைத் தொடரவேண்டும். அப்போதுதான் எல்லா பகுதி களிலும் தொழிற்சாலைகள் இயங்கமுடியும்," என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 14 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலம் என்றும் 28 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பசுமை மண்டலம் என்றும் அறி விக்கப்பட்டுள்ளன.
"சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டத்தில் கொரோனா கிருமித் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னை பெருநகரில் மக்கள் அதி கம் வசிப்பதே இதற்கு காரணம்.
"குறுகலான தெருவில் அதிக மக்கள் வசிக்கும் காரணத்தால் எளிதாக நோய் பரவுகிறது. கிருமி நாசினியை அனைத்துப் பகுதி களிலும் தெளிக்கவேண்டும். நகரப் பகுதியில் இருக்கும் கழி வறைகளை மூன்று முறை தினமும் சுத்தம் செய்யவேண்டும்.
"அரசு அறிவிக்கும் வழிமுறை களைப் பின்பற்றினால் இந்த நோய் தொற்று ஒழிக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் 50 வயதுக்கு மேல் இருப்பின் அவர்கள் பணிக்கு வரவேண்டாம்," என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

