குமரி பச்சை மண்டலமாகும் சூழல்

குமரி பச்சை மண்டலமாகும் சூழல்

1 mins read
4fe71588-719c-40cf-b66d-c044fad80054
கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் உள்ள நிலையில், வரும் 3ஆம் தேதிக்கு பின்னர் குமரி மாவட்டம் பச்சை நிற பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது. கோப்புப்படம்: ஊடகம் -

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், எழுவர் குணமாகிவிட்டனர். மேலும் மூவருக்கு கிருமித் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களும் ஓரிரு நாளில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் உள்ள நிலையில், வரும் 3ஆம் தேதிக்கு பின்னர் குமரி மாவட்டம் பச்சை நிற பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.