தூய்மைப் பணியாற்றும் ஊழியர்களுக்கு சேமிப்பை தந்த மாணவன்

தூய்மைப் பணியாற்றும் ஊழியர்களுக்கு சேமிப்பை தந்த மாணவன்

1 mins read

மாயவரம்: கொரோனா தொற்று பரவலை முறியடிக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக சிறப்பாக இருப்பது பற்றிய செய்திகளை அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த 8 வயது மாணவன் ஜெய ஸ்ரீவர்மன் மிதிவண்டி வாங்க பல ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.4,586ஐ தூய்மைப் பணியாளர்களுக்கு உதவ பேரூராட்சி அலுவலர் குகனிடம் வழங்கினார். மாணவன் வழங்கிய தொகையைக் கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு சுண்டல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர் தெரிவித்தார். மாணவன் ஓட்டுநர் மணிவண்ணனின் மகன் ஆவார்.