ஆறு பேர் கட்டமைப்பைக் கண்டுபிடிக்க போலிஸ் தீவிரம்; கள்ளப்பணக் கும்பல் கைது

சென்னை: தமிழ்­நாட்­டில் கள்­ளப்­பணப் புழக்­கம் தொடர்­பில் ஆறு பேர் அடங்­கிய ஒரு கும்­பல் போலி­சி­டம் சிக்கி இருக்­கிறது.

அந்­தக் கும்­பல் மாநிலம் முழு வதும் கள்­ளப்­பணக் கைவரிசை யைக் காட்டி இருக்­கிறது என்று போலி­சார் சந்­தே­கிக்­கி­றார்­கள்.

இத­னால் பல கோணங்­க­ளி­லும் அவர்­கள் விசா­ர­ணை­யைத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

கள்­ளப்­ப­ணக் கட்­ட­மைப்­பு­டன் மேலும் பலர் தொடர்­பில் இருக்­க­லாம் என்­ப­தால் எந்­தெந்த மாவட்­டங்­களில் எவ்­வ­ளவு கள்­ளப்­ப­ணம் புழங்கி இருக்­கிறது, யார் யாரெல்­லாம் இதில் சம்­பந்­தப்­பட்டுள்ளனர் என்­பதை எல்­லாம் போலிஸ் துரு­வித்துருவி ஆராய்­கிறது.

அதி­கா­ரி­க­ளி­டம் சிக்கி உள்ள கும்­ப­லின் கார­ண­கர்த்தா என்று கரு­தப்­படும் மணி­கண்­டன், 34, என்­ப­வ­ரின் வீட்­டில் ரூ. 65 லட்­சம் கள்­ளப்­ப­ணம் சிக்கி இருக்­கிறது. அவற்­றில் 10, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்­டு­கள் அடங்­கும். பல சாத­னங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

மணி­கண்­ட­னுக்கு கள்­ளப்­ப­ணத் தொழில்­நுட்­பம் தெரி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

கள்­ளப்­ப­ணத்தை இந்­தக் கும்பல் மாநி­லம் முழு­வ­தும் மது­பா­னக் கடை போன்ற கூட்­டம் அதி­கம் உள்ள இடங்­களில் சந்­தே­கம் ஏற்­ப­டாத வகை­யில் புழக்­கத்­தில் விட்டு வந்­துள்­ளது என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள்.

சந்­தோஷ்­கு­மார், 33, என்­ப­வர் புதுக்­கோட்டை மாவட்­டம் திரு­ம­யம் அடுத்த மூங்­கித்­தாம்­பட்டி மதுக்­கடை­யில் கடந்த 16ஆம் தேதி கள்ளப்­ப­ணத்­தைக் கொடுத்து மது வாங்­கி­ய­போது பிடி­பட்­டார். பிறகு ராமச்­சந்­தி­ரன், 30, இப்­ரா­ஹிம், 27, முகம்­மது நசுரூ­தின், 32, சுரேஷ், 48, ஆகிய நால்­வ­ரும் பிடி­பட்­ட­னர். பிறகு மணி­கண்­டன் சிக்­கி­னார்.

மணிகண்டன் சென்னையில் பொருட்காட்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாததால் கள்ளப்பணம் அச்சடிப்பதில் அவர் ஈடுபட்டார் என்று தெரிகிறது.