செய்திக்கொத்து (தமிழ் நாடு) 22-5-2020

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் அருகே தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியில் ஒரு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகன ஓட்டுநரான மோகன், 39, என்பரைக் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதலான அரிசி, குடியுரிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.


வெடிகுண்டு: நால்வர் பிடிபட்டனர்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே இரு சக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போலிசார், வாகனங்களில் நாட்டு வெடிகுண்டுகளைக் கண்டு நால்வரை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவரான சூர்யா, 23, என்பவர், பாமக நகரச் செயலாளர் ஒருவரின் புதல்வர் என்பது தெரிய வந்தது. நால்வர் மீதும் ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. அதிகாரிகள் அவர்கள் மீது புதிதாக வழக்குகளைப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


செய்தித்தாள்: வழக்குகள் ரத்து

சென்னை: அரசியல் தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்தியதாக தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர், நக்கீரன் மற்றும் முரசொலி ஆகிய செய்தித்தாட்கள் மீது, 2012ல் இருந்து தமிழக அரசு பல்வேறு அவதூறு வழக்குகளைத் தொடுத்தது.

அந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


1,500 ஏக்கரில் கடல்நீர் புகுந்தது

நாகை: வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன் உருவான புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்ததால் 1,500 ஏக்கர் விளை நிலம் சேதம் அடைந்தது. புயல் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.


விதிமீறல்: ரூ.6.54 கோடி வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊடரங்கு உத்தரவை மீறியதற்காக 407,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.6.54 கோடி அபராதம் வசூலாகி இருக்கிறது. 470,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 498,000 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று போலிஸ் தெரிவித்து உள்ளது.


கடலூர், நாகை வழி பேருந்து

புதுச்சேரி: தமிழக எல்லையான கடலூர், நாகை மாவட்டங்களைக் கடந்து புதுச்சேரி-காரைக்கால் இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முகக்கவசம், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி பேருந்தில் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கடலூர், நாகை மாவட்டங்களைப் பேருந்து கடக்கும்போது பயணிகளை ஏற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!