நிதி கேட்டு போராடிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

நிதி கேட்டு போராடிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

1 mins read
d813965c-4695-4273-b662-8b60567494c0
தமி­ழ­கத்­தில் ஆட்­டோக்களை இயக்க அனு­ம­திக்­க­வேண்டும் என்­றும் கொரோனா நிவாரண நிதி கிடைக்­க­வில்லை என்று கோரி­யும் பல இடங்­களில் நேற்று ஆட்டோ ஓட்­டு­நர்­கள் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். படம்: இணையம் -

தஞ்சை: தமி­ழ­கத்­தில் ஆட்­டோக்களை இயக்க அனு­ம­திக்­க­வேண்டும் என்­றும் கொரோனா நிவாரண நிதி கிடைக்­க­வில்லை என்று கோரி­யும் பல இடங்­களில் நேற்று ஆட்டோ ஓட்­டு­நர்­கள் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

தஞ்­சை­யில் ஆட்­டோக்­களை இயக்க அனு­ம­தி­ கோரி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் மனு கொடுக்­கச் சென்ற ஓட்­டு­நர்­களுக்கும் போலி­சா­ருக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது.

அதை­ய­டுத்து மாவட்ட ஆட்சியர் அலு­வ­ல­கம் முன் 50க்கும் மேற்­பட்ட ஆட்டோ ஓட்­டு­நர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதே­வே­ளை­யில், தமி­ழக அரசு அறி­வித்த கொரோனா நிவா­ரண நிதி ரூ.2,000 இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என புகார் தெரி­வித்து திரு­வா­ரூ­ரில் தொழி­லா­ளர் நல வாரி­யம் முன் குடை­களை ஏந்தி ஆட்டோ தொழி­லா­ளர்­கள் பலரும் ஒன்றுகூடி நேற்று ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.