சென்னை முழுவதும் சாலையில் பரபரப்பை கிளப்பிய போதையர்

சென்னை: தமி­ழக முதல்­வர் பழனி­சாமி, புதன்­கி­ழமை தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்து காம­ரா­ஜர் சாலை, விவே­கா­னந்­தர் இல்­லம் வழி­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்­தார். அவர் சாலை­யைக் கடந்து செல்­வ­தற்­காக வாக­னங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அப்­போது இருசக்­க­ர­ வா­க­னத்­தில் வந்த இரு­வர், திடீ­ரென்று முதல்­வ­ரின் பாது­காப்பு வாக­னங்­களுக்­குக் குறுக்கே புகுந்து பாது­காப்பு வாக­னத்தை இடிப்­ப­தைப் போல் பறந்து சென்­ற­னர்.

இது பற்றி போலிஸ் கட்­டுப்­பாட்டு அறைக்­குப் புயல் போல் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

உடனே அந்த இரு­சக்­கர வாக­னத்­தின் எண்­ணைக் கண்­டு­பி­டித்த கட்­டுப்­பாட்­டு அறை, அதை நகர போலி­சார் அனை­வ­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்தி அந்த இரு­சக்­கர வாக­னத்தை எங்கு சென்­றா­லும் மடக்­கிப் பிடிக்­கும்­படி கட்­ட­ளை­யிட்­டது.

நக­ர் முழு­வ­தும் போலிஸ் விழிப் படைந்­தது.

இந்­நி­லை­யில், அந்த இருவரும் பல இடங்­க­ளி­லும் புகுந்து புகுந்து போலி­சா­ரி­டம் பிடி­ப­டா­மல் தப்­பிச் சென்­ற­னர். வழி­யில் நேப்­பி­யர் பாலத்­தில் பணி­யில் இருந்த அதி­கா­ரி­கள், அவர்களின் வாக­னத்தை நிறுத்த முயன்­ற­போது ஜெக­தீ­சன் என்ற போலிஸ் அதி­கா­ரி­யின் காலில் மோதி­விட்டு அவர்­கள் தப்­பி­னர். ஆனால் எதிரே வந்த இரு­சக்­கர வாக­னத்­தில் மோதி கீழே விழுந்து இளை­ஞர்­கள் இரு­வ­ரும் இலேசாக காயம் அடைந்­த­னர்.

நவீன், 19, சரத்­கு­மார், 20, என்ற அந்த இரு­வ­ரை­யும் கைது செய்த போலி­சார் பல பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப் பதிந்து பிறகு பிணை­யில் விடு­வித்­த­னர். அவர்­கள் இரு­வ­ரும் கஞ்சா புழங்­கி­கள் என்­பது தெரியவந்­தது.

இரு­வ­ரும் வந்த இரு சக்­கர வாக­னம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இரு­வ­ரி­டத்­தி­லும் கஞ்சா பிடி­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!