சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும்; பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது; பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது; படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் படப்பிடிப்பு இடத்தைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்; படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

