தமிழக அரசு: மே 31 வரை ரயில், பேருந்து, விமானச் சேவை இல்லை

தென்­காசி: தமி­ழ­கத்­தில் இம்­மா­தம் இறுதி வரை பேருந்து, ரயில், விமா­னச் சேவை­கள் இயங்குவதற்­கான வாய்ப்­பில்லை என்று தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கடந்த மார்ச் மாதம் முதல் முடங்­கிக் கிடக்­கும் உள்­ளூர் விமா­னச் சேவை­யா­னது வரும் 25ஆம் தேதி திங்­கள் முதல் இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளி­லும் மீண்­டும் உயிர்­பெ­ற உள்­ளது.

இந்­நி­லை­யில், “இம்­மா­தம் 31ஆம் தேதி வரை எங்­கள் மாநி­லத்துக்கு விமா­னச் சேவை­களை இயக்­க­வேண்­டாம்,” என்று விமா னப் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­கத் திடம் தமி­ழக அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

“தமி­ழ­கத்­தில் வரும் 25ஆம் தேதி முதல் விமா­னச் சேவை­யைத் தொடங்­க­வேண்­டாம். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடங்­க­லாம்,” என்று பிர­த­மர் நரேந்­தி­ர­மோ­டிக்கு தமி­ழக முதல்­வர் பழனி­சாமி கடி­தம் எழுதியுள்­ளார்.

சென்னை நக­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படு வோர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் டாக்சி, வேன் உள்­ளிட்ட போக்கு வரத்­துக்­கான ஏற்­பா­டு­கள் குறை வாக உள்­ள­தா­க­வும் தமி­ழக அரசு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதற்­கி­டையே, “தமி­ழ­கத்­தில் பொதுப் போக்­கு­வ­ரத்தை அனு மதிப்­பது குறித்து மருத்­துவ நிபு­ணர் குழு­தான் தீர்­மா­னிக்­கும்,’’ என போக்­கு­வ­ரத்­துத் துறை ஆணை­யர் தென்­காசி ஜவ­ஹர் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வின் தாக்­கம் அதி­க­மாக உள்­ள­தால் பேருந்து போக்­கு­வ­ரத்­துக்­கும் அனு­மதி தரப்­ப­டா­மல் உள்­ளது.

இைதய­டுத்து டாக்சி, ஆட்டோ ஓட்­டு­நர்­கள் பொதுப்­ போக்­கு­வரத்தை அனு­ம­திக்­க­வேண்­டும் என தமிழக அரசை வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

“தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வின் தாக்­கம் அதி­க­மாக உள்­ள­தால் பொதுப் போக்­கு­வ­ரத்தை அனு மதிப்­ப­தில் சிக்­கல் நீடிக்­கிறது. பேருந்து, டாக்சி உள்­ளிட்ட வாடகை வாக­னங்­க­ளின் போக்கு வரத்தை அனு­ம­திப்­பது குறித்து மருத்­துவ நிபு­ணர்­கள் குழு­தான் அறி­விக்­கும் என அரசு தெரி­வித் துள்­ளது.

“அத­னால் நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து மருத்துவக் குழு அளிக்­கும் அறிக்­கை­யைப் பொறுத்­து­தான் அரசு நெறி­முறை களை வகுக்­கும் என எதிர்­பார்க்கி றோம்,” என்று ஜவ­ஹர் கூறி­னார்.

அத்­து­டன், கலந்­து­ரை­யாட லின்­போது பிர­த­மர் மோடி­யி­டம் பழ­னி­சாமி வரும் 31ஆம் தேதி வரை தமி­ழ­கத்­திற்கு ரயில்­கள் விட­வேண்­டாம் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ள­தால் அந்த தேதி வரை­யி­லும் ரயில் சேவை தமி­ழ­கத்­தில் துவங்­கப்­ப­டாது என­வும் தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!