கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்ட கொரோனா நோயாளிகளால் மருத்துவர்கள் அதிர்ச்சி

சேலம்: சேலம் அரசு மருத்­துவ மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த

கொரோனா கிரு­மித் தொற்று நோயா­ளி­கள், மருத்­து­வர்­க­ளி­டம் தங்­க­ளுக்கு வாய்க்கு ருசி­யாக பிரி­யாணி போன்ற உணவு வேண்­டும் என்று கேட்­ட­னர்.

இதற்கு மருத்­து­வர்­கள் மறுத்து விடவே, நோயா­ளி­கள் தாங்க ளாகவே பிரி­யாணி உள்­ளிட்ட அசைவ உண­வுக்கு இணை­யம் வழி ‘ஆர்­டர்’ செய்­த­தைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்­த­னர்.

வெளி­மா­நி­லம், வெளி மாவட்­டங்களில் இருந்து சேலம் வந்த 22 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப் பட்டு சேலம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளுக்­கு­ரிய உணவு அங்­கேயே வழங்­கப்­ப­டு­கிறது.

ஆனால் இந்த 22 பேரில் நால்­வர் அசைவ உணவு வேண்­டும் என மருத்­து­வர்­க­ளி­டம் கோரி­னர். அதற்கு மருத்­து­வ­மனை நிர்­வா­கம் மறுத்­து­விட்­டது.

இதை­ய­டுத்து இணை­யம் வழி தந்­தூரி சிக்­கன், சிக்­கன் பிரை, சிக்­கன் பிரி­யாணி உள்­ளிட்ட அசைவ உண­வு­களை அவர்­கள் ‘ஆர்­டர்’ செய்­துள்­ள­னர்.

இந்த உண­வு­க­ளோடு வந்த உண­வக ஊழி­யர் ஒரு­வர், அரசு மருத்­து­வ­ம­னை­யின் தனி­மைப்படுத்­தப்­பட்ட வார்டு முன்­பாக காத்­தி­ருந்­தார். அப்­போது மருத்துவர்­கள் அவ­ரி­டம் விசா­ரித்­த­போது நோயா­ளி­கள் உணவுக்கு ஆர்­டர் கொடுத்­தது தெரியவந்­தது. அவரை எச்­ச­ரித்து திருப்பி அனுப்­பி­ய­தோடு தொற்று நோயாளிகளுக்­கும் மருத்­து­வர்­கள் அறி­வுரை கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!